பெங்களூரு ஆடுகோடு அருகே வசித்து வரும் 25 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், சமீபத்தில் Happn என்ற டேட்டிங் செயலியில் பதிவுசெய்து ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். அனன்யா என்ற பெயரை கொண்ட அந்த பெண், முதலில் சாதாரணமாக நலம் விசாரித்து உரையாடி வந்துள்ளார். நாள்கள் கடந்து, இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் பரிமாற்றம் நடைபெறத் தொடங்கியது.

இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் காதல், பின்னர் ஆபாச உரையாடலாக மாறியது. ஒருநாள் அந்த பெண், இளைஞருக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக காட்சி அளித்தார். அதன்பின் அந்த இளைஞரையும் ஆடைகளை களைக்குமாறு கூறியுள்ளார். ஆசையை அடக்க முடியாத அந்த இளைஞர், பெண்ணின் கோரிக்கையின்படி ஆடைகளை கழட்டி, வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசினார். இதைத்தொடர்ந்து உரையாடல் முடிந்து விட்டது. ஆனால் அதுவே அவரது வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

அடுத்த நாள் அந்த பெண், அந்த இளைஞருக்கு மீண்டும் தொடர்பு கொண்டு, “உன் நிர்வாண வீடியோ என்கிட்ட இருக்கு… இதை இன்ஸ்டாகிராமில் உனது நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்படி வெளியிடப்போகிறேன். இதைத் தடுக்க ரூ.30,000 கொடுக்க வேண்டும்” என மிரட்டினார். வீடியோ வெளியானால் சமூகத்தில் தன் கௌரவம் குலைந்துவிடும் என்ற பயத்தில் திகைத்த இளைஞர் உடனே பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

முதலில் ரூ. 30,000 அனுப்பிய இளைஞரிடம், “இன்னும் சில காட்சிகளும் இருக்கின்றன” என கூறி மேலும் ₹40,000 கேட்டுள்ளார். குறுகுறுத்து ₹70,000 வரை அந்த பெண் பறித்துள்ளார். அதற்குப் பிறகும் மிரட்டல்களை நிறுத்தவில்லை என்பதிலிருந்து இளைஞருக்கு இது ஒரு சூழ்ச்சி என்பதை புரிந்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர், நம்பிக்கை தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சட்ட உதவி பெறும்படி முடிவு செய்துள்ளார். தற்போது அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதோடு, Happn செயலியை பயன்படுத்தும்போது மிகுந்த கவனம் தேவை என்பதற்கான விழிப்புணர்வும் சமூகத்தில் எழுந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு சைபர் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்நிலையில் அந்த பெண்ணின் சுயவிவரமும் போலியானதாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்று இணையம் வழி நடக்கும் “சைபர் செக்ஸ் டார்கெட்” மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இளைஞர்களும், பெண்களும் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.