செங்கோட்டையன் தொடர்பான விவகாரம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும் திட்டத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இது, அவர் பாஜக மூலமாக உட்கட்சி விவகாரங்களை தீர்க்க முயற்சி செய்கிறார் என்றே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், EPS தனது தேர்தல் பரப்புரை பயணத்தையும் மாற்றியமைத்தார் என கூறப்பட்டது.
இந்நிலையில், EPS இதை முற்றிலும் நிராகரித்து, “அமித்ஷாவை சந்திக்கும் எந்தத் திட்டமும் இல்லை. இது தவறான தகவல். அதிகாரத்தைவிட எனக்குத் தன்மானமே முக்கியம். மேலும் மழை காரணமாகத்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது” எனத் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
இது, அதிமுக உள்ளமைப்பிலும், தேசிய அளவிலும் அவரது நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும், EPS தனது கட்டுப்பாட்டை விடத் தயார் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அரசியல் நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
