மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தனித்த கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். மஞ்சள் நட்சத்திரங்களுடன் கூடிய கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் புதிய கட்சியின் கொடியை வெளியிட்டுள்ளார்.

அவர் கட்சியின் கொடி 75% சிவப்பும், 25% கருப்பும் நிறைந்திருக்கின்றன. மேலும், கொடியின் வலது புறத்தின் மேற்பகுதியில் ஏழு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாட்டை மையமாக கொண்டு, தனது புதிய அரசியல் பயணத்தை மல்லை சத்யா ஆரம்பித்துள்ளார்.

அதிமுக, திமுக என பிரதான கட்சிகளின் ஆதிக்கம் உள்ள நிலையில், மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளதே முக்கிய அரசியல் வளர்ச்சி என கருதப்படுகிறது. கட்சியின் பெயரை நவம்பர் 20ஆம் தேதி அறிவிப்பதாகவும், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க விசேஷ குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மதிமுக பாசறையில் விரிசல் காணப்படும் சூழ்நிலை உருவாகி, மாநில அரசியலில் புதிய கூட்டணிக் கணக்கீடுகளுக்கு இடம் ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கின்றன.