உத்தரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில், கமரூலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தூர்வா கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், தனது மனைவி உமா பிரஜாபதியின் காதல் உறவை ஏற்றுக்கொண்டு, அவரைத் தனது முன்னாள் காதலனுடன் திருமணம் செய்து, அவரோடு அனுப்பிய  சம்பவம் சமூக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

கடந்த  மார்ச் 2, 2025 அன்று, சிவசங்கர் ) மற்றும் உமா பிரஜாபதி  இருவரும்திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு உமா, தன் மாமியார் வீட்டில் வாழத் தொடங்கினார். ஆனால், அதே நேரத்தில், தன் பழைய காதலனை தொடர்ந்து தொடர்பில் வைத்துக் கொண்டிருந்தார். இந்த உண்மையை தெரிந்துகொண்டதும், சிவசங்கர் முதலில் தன்னுடைய மனைவியுடன் பேசி அவளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், உமா தனது காதலை விட்டுக்கொடுக்க மறுத்தார். மனைவியுடன் தொடர்ந்த தகராறு, குடும்பத்தில் மோசமான நிலைமையை உருவாக்கும் அபாயம் இருப்பதை உணர்ந்த சிவசங்கர், வற்புறுத்தி வாழவைக்கும் நிலைக்கு, பதிலாக, மனைவியின் விருப்பத்தை மதிக்க முடிவு செய்தார்.

இறுதியாக, பரஸ்பர ஒப்புதல் அடிப்படையில், உமாவும் அவரது காதலனும் அமேதியின் ஜகதீஷ்பூர் தொழில்துறை பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். அங்கு, இருவருக்கும் மாலை மாற்றம் செய்யப்பட்டு, சிந்தூரும் பூசப்பட்டதாகவும், அவர்கள் சமூக ரீதியாக கணவன்-மனைவியாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம், தற்போது அமேதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.