பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக நிலவி வருகின்றன.
சமீபத்தில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திண்டிவனம் பகுதியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாஸ் தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர்.
இதன் காரணமாக, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் மோதும் சூழல் நிலவியதால், அங்கு காவல்துறை விரைவாக குவிக்கப்பட்டது. அலுவலகத்தில் பூட்டு போட்ட சம்பவம், பாமக உள்நிலை முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
