உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டி கும்ஹர்ரா கிராமத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 70 வயது முதியவர் சீதாராம், கடந்த 35 ஆண்டுகளாக ஒரே பாம்பால் 14 முறை கடிக்கப்பட்டும் அதிசயமாக உயிருடன் தப்பி இருக்கிறார். அதிலும் முக்கியமாக, ஒவ்வொரு 3 வருடத்திற்கு ஒருமுறை தான் அந்த பாம்பு வந்து கடிக்கிறதாம். இச்சம்பவம் இப்போது முற்றிலும் ஒரு மர்மம் நிறைந்த சம்பவமாக மாறி உள்ளது

முக்கியமாக, சமீபத்தில் அவர் கேதாபதி ஹனுமான் கோவிலுக்கு சென்றபோது, புல்வெளியில் இருந்த பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. இது 14வது முறை என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். உள்ளூர் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நிலையான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பலரும் “இதுவே நாகினி சீரியலின் உண்மை கதை!” என தங்களது சந்தேகத்தையும் நகைச்சுவையையும் இணைத்து பேசி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மீதான மக்கள் நம்பிக்கைகள் பலவகையாக உள்ளன. சிலர் இது முன் ஜென்ம பாவமா என கேள்வி எழுப்ப, மற்றொருபக்கம் சிலர் இதனை நாகநாகினியின் பழிவாங்கும் நிகழ்வாகவும் சொல்கின்றனர். ஆனால் மருத்தவர்கள் கூறுவதைப் பொருத்தவரை, சீதாராமின் உயிர் தப்பிக்க காரணம் அவரது உடல்நலமும், சகிப்புத்தன்மையும் தான். ஆனால் கிராம மக்கள் இதை விஞ்ஞான ரீதியில் அல்லாது ஒரு அதிசயமாகவே பார்க்கின்றனர். “இப்போ எனக்கு பயமில்லை… ஆனா அந்த பாம்பு ஏன் என்னை பின்தொடருது என்பது தான் புரியலை” என சீதாராம் தன் கேள்வியுடன் அனைவரையும் யோசிக்க வைக்கிறார்.