லக்னோவின் கஜுஹா பகுதியில் நடந்த கோர சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் தனது சிறிய பேரனுடன் நடந்து சென்ற விஜய் ரஸ்தோகி என்ற நபர், எதிர்பாராத விதமாக தெருவில் சுற்றித்திரிந்த காளையால் தாக்கப்பட்டார். அந்த காளை, திடீரென ஓடி வந்து, தாத்தா மற்றும் பேரனை கொம்புகளால் பலமாக தாக்கியது.
அதிர்ச்சியில் இருவரும் தரையில் விழ, இன்னொரு காளை சேர்ந்து அவர்களை நசுக்கியது. அப்போது சத்தம் கேட்ட பொதுமக்கள் விரைந்து வந்து, காளைகளை விரட்டினர். இந்த சம்பவத்தில் தப்பியுள்ள இந்த இரண்டு பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
लखनऊ
➡खजुहा में आवारा सांडों का आतंक
➡विजय रस्तोगी, उनके पोते पर सांडों का हमला
➡सांडों के हमले में दादा और पोते हुए घायल
➡नगर निगम जोन-2 क्षेत्र के खजुहा का मामला#Lucknow #Breakingnews pic.twitter.com/vCV0g09B5O— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 7, 2025
“>
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம், நகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் நாள்தோறும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்னோ மட்டுமின்றி, பல நகரங்களில் தெருவில் சுற்றும் பசுக்கள், காளைகள், நாய்கள் என அநேக கால்நடைகள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ளன.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமும், உரிமையுள்ள நபர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகளும் இந்த தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுக்கு வர, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
