அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து செங்கோட்டையன் கட்சியில் இருக்கும் நிலையில் அதிமுகவை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் இந்த வேலைகளை 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி செய்யாவிடில் நானே அந்த பணிகளை செய்வேன் எனவும் கூறினார்.

இதனால் செங்கோட்டையனிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு அதிமுக கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் நேற்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நிலையில் 2000 நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். இதைத்தொடர்ந்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ராஜினாமா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் சுமார் 1000 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் முன்னிலையில் தங்கள் பதவியை அவர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.