அமெரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் மைக் ஹோல்ஸ்டன், தனது வீட்டில் உள்ள கோழிக் கூடத்துக்குள் நுழைந்த 10 அடிக்கு நீளம் உடைய மலைப்பாம்பை, எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கையாலேயே தூக்கி வெளியே இழுத்துள்ளார்.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பகிர்ந்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வலம்வந்து, இதுவரை 2 மில்லியனுக்கும் மேல் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது Possible ஆ..? இதுதான் ரியல் ஹீரோ” என்று பாராட்டிக்கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
“>
மைக் ஹோல்ஸ்டன் கோழிக் கூடத்தில் உள்ள பாம்பை மிகுந்த நிதானத்துடன் தூக்க முயன்றபோது, அந்த பாம்பு திடீரென அவரின் முகத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால் தனது அனுபவமும் தைரியமும் கொண்டு, அதை சமாளித்து மிகவும் இயல்பாக தன்னை பாதுகாத்துக்கொண்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள், “நிஜமா இது தான் சூப்பர்ஹீரோ” என கமெண்டுகளால் குவித்து வருகின்றனர்.
