நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, TTV தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து நீண்ட நாட்களாகவே பரபரப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “2024 தேர்தலில் இருந்தே தினகரனும், அவரது கட்சியும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். NDA கூட்டணியில் தான் இருக்கிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லை” எனத் திட்டவட்டமாக கூறினார்.
இதற்கு முன்பு, “நாங்கள் NDAவில் இருக்கிறோமா என்பதை நயினார் நாகேந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்” என டிடிவி தினகரனே கூறியிருந்தார். தற்போது நயினார் நாகேந்திரனின் அதிகாரப்பூர்வ உறுதிப்படையான இந்த அறிக்கை, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களில் தமிழக அரசியலில் இந்த கூட்டணிக்கான விளைவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
