பீஹார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தங்கம், வெள்ளி வியாபாரியான நவீன் பூவானியா மற்றும் அவரது மகனை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் திடீரென கடைக்குள் புகுந்துதுப்பாக்கி சூடு நடந்தியுள்ளனர்

நேரில் கண்டவர்கள்  கூறியதாவது, குற்றவாளிகள் மொத்தம் ஆறு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், நான்கு குண்டுகள் நவீனின் மார்பு மற்றும் வயிற்றில் பாய்ந்ததாகும். கடுமையாக காயமடைந்த அவரை முதலில் பௌன்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பகல்பூர் ஜவஹர்லால் நேஹ்ரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக  உயிரிழந்தார்.

“>

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். “குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் கோரிய அவர்கள், வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து மருத்துவமனை வரையிலும் மக்கள் திரண்டதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக சோதனை நடத்தி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.