போஜ்புரி திரைப்படத் துறையைச் சுற்றி பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நடிகரும் பாடகருமான பவன் சிங், நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பை “ஏதோ பட்டது” என்ற பெயரில் தொட்ட காட்சி வீடியோவாக வெளியானது.

அந்த தருணத்தில் அஞ்சலி வெளிப்படையாக சிரித்தபோதிலும், பின்னர் அவர் மிகவும் அவமானத்திலும் துயரத்திலும் இருந்ததாக விளக்கம் அளித்தார். “பொது இடத்தில் ஒருவரின் சம்மதமின்றி தொடுவது தவறு. எனக்கு மிகவும் வலி அளித்தது. இனி நான் போஜ்புரி துறையில் பணியாற்ற மாட்டேன்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.

நிகழ்ச்சியின்போது பவன் சிங்கின் ரசிகர்கள் அதிகமாக இருந்ததால் அப்போது எதிர்வினையாற்ற இயலவில்லை என்றும், ஆனால் அதன் பிறகு சமூகம் மற்றும் ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை சீரியஸாக எடுத்ததன் பின் தான் மனதில் உள்ளதை  வெளிப்படுத்தினேன் என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

“>

இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் கிளப்பிய நிலையில், பவன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். “எனக்கு எந்தத் தவறான நோக்கமும் இல்லை. உங்கள் உணர்ச்சிக்கு புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என அவர் பதிவிட்டார்.

இதற்கிடையில், பவன் சிங்கின் இரண்டாவது மனைவி ஜ்யோதி சிங் சமூக வலைதளத்தில் உணர்ச்சி மிகுக்க  பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “கடந்த பல மாதங்களாக பவன் எனது தொடர்பில் கூட இல்லை. அவரது புறக்கணிப்பு என்னை தற்கொலை பற்றி சிந்திக்க வைத்துவிட்டது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பவன் சிங்கைச் சுற்றி ஏற்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த சர்ச்சைகள் போஜ்புரி சினிமா உலகையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன.