தமிழ் திரையுலகில் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படமாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் … ராஜீவ் மேனன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் வெளிவந்த இந்தப்படம் 2000 மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்படத்தில், சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மம்முட்டி, இந்தப்படத்தில் ஒரு காலைக் களத்தில் இழந்த மேஜர் பாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தக் கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அவர் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது. மம்முட்டியின் மிகுந்த உணர்ச்சி பூர்வமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

சமீபத்திய ஒரு நேர்காணலில் இயக்குனர் ராஜீவ் மேனன், “மேஜர் பாலா கதாபாத்திரத்திற்கு நடிகரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானது. ஒரு காலைக் கொண்டவராக நடிக்க விரும்பவில்லை என்று கூறி பல முன்னணி நடிகர்கள் அந்த வேடத்தை நிராகரித்தனர். ஆனால் இறுதியில் மம்முட்டி அந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு அற்புதமாக செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.