நாட்டின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. சாலைகள் தண்ணீரில் மூழ்கி, பாலங்கள் உடைந்து, கிராமங்கள் பல நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலி நயாகாவ் அருகிலுள்ள மாஜ்ரி கிராமத்தில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய  சாலையை எஸ்யூவி வாகனத்தில் ஒருவர் கடக்க முயன்றபோது, அதே வாகனம் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

“>

 

23 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், தண்ணீர் எவ்வளவு வேகமாக பாய்கிறது என்பதையும், அதில் வாகனம் சிக்கி அடித்துச் செல்லப்படுவதையும் தெளிவாக காண முடிகிறது. கார் ஓட்டியவர்  பாதுகாப்பாக கடந்து விடுவேன் என நினைத்திருந்தார்.

ஆனால், வெள்ளத்தின் வேகத்திற்கு  எதிராக அவர் வாகனம் முழுவதும் வெள்ளத்தோடு பாய்ந்து சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பயமுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர், ஆனால் உதவ எவராலும் முடியவில்லை.

இந்த வீடியோவை இதுவரை 13 லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ள இந்த வீடியோ, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. மூளை மக்கள் தலையில் இல்லை, முழங்காலில் தான் மூளை வைத்துக் கொண்டு நடக்கிறார்கள்” என மற்றொருவரும் குறிப்பிட்டுள்ளனர். சிலர் நகைச்சுவை கவிதை வடிவிலும் கருத்து எழுதியுள்ளனர்: