டெல்லி தென்கிழக்கு பகுதியில் உள்ள கல்காஜி கோவிலில் பணியாற்றி வந்த 35 வயது சேவதார் யோகேந்திர சிங், சிலருடன் ஏற்பட்ட தகராறில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தகவலின்படி, ஆகஸ்ட் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கோவிலில் ஏற்பட்ட சண்டையைப் பற்றி கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.

உத்தரப்பிரதேசம் ஹர்தோயை சேர்ந்த யோகேந்திர சிங், 14 ஆண்டுகளுக்கும் மேலாக கல்காஜி கோவிலில் சேவதாராக பணியாற்றி வந்தவர். அந்த இரவு, கோவிலுக்கு வந்த சிலர் அவரிடம் பிரசாதமாக  புனித துண்டு மற்றும் உணவு வழங்கல் கேட்டுள்ளனர்.

“>

 

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி, குற்றவாளிகள் கையால் அடித்து, குச்சியால் தாக்கினர். கடுமையாக காயமடைந்த யோகேந்திர சிங், உடனடியாகமருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான தக்ஷின்புரியை சேர்ந்த அதுல் பாண்டே (30) சம்பவ இடத்திலேயே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி மற்றும் அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.