பொதுச் சாலையில் ஸ்டண்ட் செய்வது சட்டவிரோதமானது. அதுபோல் பிடிபட்டவர்களுக்கு போலீசார் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதனால் சிலர் திருந்தினாலும், இன்னும் சிலர் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஒரு இளம் பெண் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியிருந்தும் ஸ்டண்ட் செய்வதை நிறுத்த மறுப்பதாக வீடியோவில் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
View this post on Instagram
“>
_vaishu_yadav_24 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண், “ஸ்டண்ட் வீடியோவுக்காக யாரோ புகார் கொடுத்ததால், எனக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அபராதம் 20 ஆயிரமோ, 40 ஆயிரமோ ஆனாலும், நம்ம தில்லு குறையாது” எனவீடியோவில் பேசியுள்ளார்.
View this post on Instagram
“>
மேலும், “என்னை வெறுப்பவர்கள் வெறுப்பார்கள். ஆனால் நான் என்ன செய்கிறேனோ அதை தொடர்ந்தே செய்வேன்” என கூறி, தனது சமீபத்திய அபராத ரசீது ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர்
இதை பார்த்த சிலர், “சகோதரி, உன் ஆதிக்கத்தை இப்படியே காப்பாற்றிக்கொள், பொறாமை கொண்டவர்கள் எரியட்டும்’ எரியட்டும்” என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், சிலர் “இது பப்ளிசிட்டிக்காக வேறொருவரின் அபராதத்தை காட்டியிருக்கலாம்” என சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், பலர் அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து, “ஸ்டண்ட் செய்வது உயிருக்கு ஆபத்தானது. நீயும் உன்னோடு பிறரின் உயிரையும் ஆபத்தில் தள்ளாதே” என அறிவுறுத்தியுள்ளனர்.
