மதுரை பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அந்த கூட்டத்தில் தளபதி விஜய் மேடையில் ரேம்ப் வாக் செய்யும் நேரத்தில், அவரை நெருங்கிப் பார்வையிட பலர் தடுப்புகளை மீறி மேடையின் அருகே செல்வதைக் காண முடிந்தது.

அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் பலரை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர், மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக குற்றம் சாட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து விஜயும், அவருடன் பணியில் இருந்த 10 பவுன்சர்களும் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், சரத்குமார் நிகழ்வின் பிறகு தவெக நிர்வாகியிடம் பேசும்போது, “தூக்கி வீசப்பட்டது நான் இல்லை” என்று கூறிய ஆடியோவொன்றும் வெளியாகியுள்ளது.

மேலும், சரத்குமாரின் தாயார், “என் பிள்ளைக்கு ஏதாவது நடந்திருந்தால் யார் பொறுப்பேற்பார்கள்? விஜய் எத்தனை பேருக்கு இப்படி செய்ய முடியும்?” என விமர்சனமாக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் என்ற தொண்டர், “பவுன்சர்கள் தூக்கி வீசியவர் நான்தான், சரத்குமார் பொய் சொல்கிறார்” என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Devi Devi (@devi_25_makeupartist)

“>

மேலும், தவெகவின் பெண் உறுப்பினரான தேவி என்பவர், சரத்குமாரின் புகார் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஜய் மேடையில் வரும்போது, சரத்குமார் தான் முன்னால் அமர்ந்திருந்ததாகவும், அவர் அணிந்திருந்த சட்டை மற்றும் இடத்தை தெளிவாக காணலாம் என்றும் கூறியுள்ளார்.

“இந்த வீடியோவில் உள்ளவாறு ஒருவர் அந்த அளவுக்கு கூட்டத்தில் இருந்து சென்றுவிட்டு உடனே வெளியே வந்திருக்க முடியாது. இதுவே போதுமான ஆதாரம்” என தெரிவித்து, சரத்குமாரின் புகாரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதன் மூலம், புகாரின் உண்மை தன்மை குறித்து சமூக ஊடகங்களிலும், தவெக தொண்டர்களிடையிலும் கலகம் ஏற்பட்டுள்ளது.