பீஹார் மாநிலம் சித்தாமர்ஹி மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதியில், விஷப்பாம்பு கடித்த பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல், மூடநம்பிக்கையில் மூழ்கிய கிராம மக்கள் பேயோட்ட சடங்கில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறித்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் தரையில் கிடந்தபடி தவிப்பதையும், சுற்றிலும் நின்ற மக்கள், பாரம்பரிய சடங்குகளைப் போல் சிகிச்சை அளிக்க முற்படுவதைப் பார்க்க முடிகிறது. மேலும், ஒருவர் குச்சி கொண்டு ஒரு கொப்ரா பாம்பை பெண்ணருகே கொண்டுவரும் முயற்சிக்கிறார். பாம்பு விஷத்தை மீண்டும் உறிஞ்சி எடுக்கும் என நம்பி இந்த செயலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது விஞ்ஞான ஆதாரம் இல்லாத செயலாகும் என்பதையும், மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அந்த பெண் உயிர் தப்பியிருப்பார் என்பதையும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
|| फिल्मी अंधविश्वास ने ली जान ||
बिहार में एक महिला को कोबरा सांप ने डस लिया लोग हॉस्पिटल ले जाने के बजाय झाड़ फूंक करवाने लगे !एक शख्स तो डंडे के सहारे जबरदस्ती सांप से जहर चुसवाने के लिए बार बार कटवाता रहा! कोबरा हर बार काटता रहा ये सिर्फ फिल्मों में दिखाया जाता है pic.twitter.com/yFVwVWD3y2
— Shailendra Shukla (@Shailendra22228) August 26, 2025
“>
நிபுணர்கள் தெரிவிப்பது போல், பாம்பு கடித்தால் உடனடியாக பதற்றமின்றி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் அமைதியாக இருக்க வேண்டும், உடல் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடிக்கப்பட்ட பகுதியில் சோப்பும் நீரும் பயன்படுத்தி மெதுவாக கழுவ வேண்டும். பின்னர், உடனே அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மையத்திற்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இங்கு, நேரத்தை இழந்து மூடநம்பிக்கையில் சிக்கியிருப்பது, தற்போதைய சமூக விழிப்புணர்வில் கேள்விக்குறி எழுப்புகிறது.
