மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், மராத்தி மொழியில் பேசத் தெரியாததைக் காரணமாகக் கொண்டு, ஒரு குடும்பத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் துன்புறுத்தியதோடு, பணம் கட்ட வற்புறுத்தி அச்சுறுத்திய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் ‘ பகிரப்பட்ட து,அதில்  “மராத்தியில் பேசு, இது மகாராஷ்டிரா!” என ஒருவன் கத்துவதும், “அவர்கள் டெல்லியிலிருந்து வந்தவர்கள்… இரட்டைப் பணம் வசூலிக்கவும்” என மற்றொருவர் கூறுவதும் தெளிவாகக் கேட்கப்பட்டது.

ஆறு மாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பம், மராத்தி பேசத் தெரியாததற்காகவே குறிவைக்கப்பட்டதாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் பணம் தருமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Zoya and Ali (@zoyaali.reel.life)

“>

“மகாராஷ்டிரா வெளியே இருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பே இல்லையா?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல், கடந்த மாதம் மீரா சாலையில் ஒரு இனிப்புக் கடை உரிமையாளரும் மராத்தி தெரியாததற்காக தாக்கப்பட்ட சம்பவம் நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் மக்களின் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.