கொஸ்டாரிக்கா கடற்கரையில் டோர்டுகுரோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு அருகே ஆரஞ்சு நிறத்தில் ஒரு சுறா தென்பட்டுள்ளது. பூங்காவுக்கு அருகே 37 மீட்டர் ஆழத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 6 அடி நீளம் உள்ள சூறாவை பார்த்துள்ளனர். உயிரினங்களின் தோளில் கருமையான நிறங்கள் குறையும் போது மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நேரத்தில் தோல் பிரகாசமாக மாறிவிடும்.

அந்த சுறாவுக்கு அல்பினிசம் எனப்படும் மரபணு குறைபாடு காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், உலகில் வேறு எங்கும் இது போன்ற சுறா இல்லை எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சுறா தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.