திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ராஜனின் மகள் காயத்ரி (19), திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த தினம் ஜோதிநகரில் நடைபெற்ற திருவிழாவில் தோழிகளுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடிய காயத்ரி, வீட்டுக்கு வந்த பின்பு திடீரென தனது அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் பற்றிய தெளிவான தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்த ஜோதிநகர் பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவியுடன் கல்வி பயின்ற தோழிகள், அவரது திடீர் முடிவால் சோகத்தில் உள்ளனர்.
