இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100) சமீபத்தில் தவறி கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வயது மூப்பு காரணமாக உடல் நிலை பலவீனமடைந்த நிலையில், நுரையீரல் தொற்றும் தீவிரமடைந்து, தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அவரது நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சற்று முன் நல்லகண்ணுவின் பேரனை நேரில் தொடர்புகொண்டு மூத்த தலைவரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மூத்த தலைவரின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் பலரிடையிலும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐயா நல்லகண்ணு, தம் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி மற்றும் மக்களுக்கான போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டவர் என்பதால், அவரது உடல்நிலை குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் ஆழ்ந்த கவலை நிலவுகிறது.
