கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா(60) இவரது மனைவி வெங்கடம்மா(55). இந்த தம்பதியினர் தங்களது மகன் அணில்(32), மகள் கவிதா(24) பேரன் அப்பு(2) ஆகியோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் குடி பெயர்ந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
நேற்று காலை வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது நரசிம்மா உள்பட ஐந்து பேரும் இறந்து கிடந்ததை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உணவில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்துவிட்டு நரசிம்மாவும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்தார்களா?அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
