ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மத்திய அரசு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க உள்ளதாகவும், அதற்கு போட்டியாக தமிழக அரசும் சிறப்பு திட்டம் ஒன்றை அறிவிக்கத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, பொங்கல் பரிசாக வழங்கப்படும் உதவித்தொகையை தீபாவளியிலேயே அறிவிக்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.