ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்காவில் வசித்து வந்த தனது வீட்டை விற்றுவிட்டு, குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அவரது இளைய குழந்தைகளான இரட்டையர்கள் நாக்ஸ் மற்றும் விவியன் அடுத்த ஆண்டு 18 வயதை எட்டியவுடன், வெளிநாட்டில் குடியேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கூறப்படுகிறது.
ஏஞ்சலினா ஜோலி, 2014-ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், 2016-ல் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகால விசாரணைக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது ஜோலி தனது குழந்தைகளுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
