சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில், ஒரு இளைஞர் சாலையில் வரும் டிராக்டரின் முன்பு படுத்து, ரீல்ஸ் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் கோபமடைந்த ஓட்டுநர் டிராக்டரை இளைஞரின் மீது மோதுவது போல ஓட்ட, இளைஞருக்கு இடுப்பு எலும்பு உடைந்ததாக கூறப்படுகிறது.

வலியுடன் அவர் எழுந்து செல்லும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் டிராக்டர் ஓட்டுநரின் செயலை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொது இடங்களில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது, தனிநபரின் உயிருக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mr. Tamila (@mr.tamila_official)