முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரியிலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த அவர், தற்போது மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். நேரடி அரசியலில் ஈடுபடாத அவர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்காக தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.