மத்தியப் பிரதேசம் சத்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் காயமடைந்த 35 வயது அஷ்வனி மிஸ்ரா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, சொட்டு மருந்து ஸ்டாண்ட் வழங்காததால், 72 வயது பாட்டி கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாட்டிலை கையில் பிடித்துக் கொண்டு பேரனின் உயிரைக் காக்க போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நிகழ்வை நேரில் கண்டவர்கள், “மருத்துவமனையில் ஸ்டாண்ட் போதுமான அளவில் இருந்தும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதே இதற்குக் காரணம்” என்று குற்றம்சாட்டினர்.

பாட்டி நடுங்கிக் கொண்டிருந்தபோதும், பேரனின் உயிர் காக்கும் தன்னம்பிக்கையுடன் பாட்டிலை கையில் பிடித்துக் கொண்ட காட்சி அங்கு இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதேசமயம், நோயாளியை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாசலிலேயே பழுதடைந்ததால், அருகிலிருந்தவர்கள் தள்ளி இயக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by ज़िन्दगी गुलज़ार है ! (@zindagi.gulzar.h)

“>

இதே மருத்துவமனைக்கு அடிப்படை உள்கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. நூற்றுக்கணக்கான நோயாளிகளை கையாளும் நிலையிலும், ஸ்ட்ரெச்சர், படுக்கைகள், உடனடி சிகிச்சை போன்ற வசதிகள் புறக்கணிக்கப்பட்டதாக அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கு பதிலளித்த சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லா, “ஸ்டாண்ட் வசதிக்கு பஞ்சமில்லை. நோயாளி 5-7 நிமிடங்களில் சிகிச்சை பெற்றார். பாட்டி தானாகவே பாட்டிலை எடுத்துக் கொண்டார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.