சமீபத்தில், கண்ணாடிக்குப் பதிலாக பனிக்கட்டியைப் பயன்படுத்தி காபி தயாரிக்கும் ஒரு வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக சூடான காபி, குளிர்ந்த காபி என இருவிதம் பரவலாக பருகப்படுகின்றன. ஆனால், பனிக்கட்டிக்குள் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஐஸ் காபி மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

வீடியோவில், வேகவைத்த காபி நேரடியாக ஒரு பெரிய பனிக்கட்டி வடிவில் ஊற்றப்படுகிறது. அதன் உள்ளே வெற்று கிளாஸ் வைக்கப்பட்டு, பின்னர் அதில் பால் சேர்க்கப்படுகிறது. நுரைத்த பின் உருவாகும் இந்த தனித்துவமான காபி காட்சிகள், காபி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளன. கிளிப்பின் முடிவில், அந்த நபர் பனிக்கட்டியிலிருந்து காபி பேஸ்டை சுரண்டி எடுப்பதும் காட்சியளிக்கிறது. இதுவே இந்த ஐஸ் காபியின் சிறப்பான பரிமாறும் முறை என்று சொல்லப்படுகிறது.

“>

 

இந்த வீடியோவை Instagram-இல் @gunsnrosesgirl3 என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். தற்போது இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து, பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். “இந்த காபி மற்ற காபி மாதிரி தான், வேறுபாடு தயாரிக்கும் முறையில்தான்” என்று ஒருபுறம் கருத்து தெரிவிக்க, “இது பணக்காரர்களின் விலாசம்” என்று சிலர் கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலர், “இதை வீட்டிலேயே செய்து பார்க்கணும் போலிருக்கே” என ஆர்வம் காட்டி வருகின்றனர்.