உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 24 மணி நேர சட்டசபை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரவிலும் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.களை, கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக சென்று சந்தித்து உற்சாகப்படுத்தினார்.
கூடவே, அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதோடு, கூட்டத்தில் மாநில ஜலசக்தித்துறை மந்திரி சுவாதந்திர தேவ் சிங் கண்களை மூடியபடி இருந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.
सोती सरकार के सोते मंत्री। pic.twitter.com/QSmrh7z4cw
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 13, 2025
“>
அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அகிலேஷ், “இந்த அரசு தூங்குகிறது… ஆனால் எதிர்க்கட்சிதான் விழித்திருக்கிறது. 24 மணி நேர சட்டசபை கூட்டம் நடத்தி மாநிலத்தை நடத்த முடியாமையை பா.ஜனதா தானாகவே வெளிப்படுத்திவிட்டது. அதனால்தான் 24 மணி நேரமும் வேலை செய்வது குறித்து பேச வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
सोती सरकार के सोते मंत्री।
डूबती उम्मीद डूबते लोग ll pic.twitter.com/KFGqNJif3P— Aman Socialist (@aman_socialist0) August 14, 2025
“>
மேலும், “ஒரு தூங்கும் அரசின் தூங்கும் மந்திரிகள்” எனக் கிண்டலாக பதிவிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாதந்திர தேவ் சிங், “அகிலேஷின் குற்றச்சாட்டு என்பது எதிர்க்கட்சியின் வழக்கமான அரசியல் நாடகம் மட்டுமே” என மறுத்துள்ளார்.
