தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்ணேறுவரம் என்ற பகுதியில் ஏரி நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மணமகளுடன் ஒரு திருமண வீட்டார் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நடு வழியிலேயே காரை நிறுத்தி 4 மணி நேரம் காத்திருந்தனர். இருப்பினும் வெள்ளம் வடியாததால் உறவினர்கள் மணமகனை தூக்கிக்கொண்டு சாலையை கடந்து சென்றனர். பின்னர் வேறு ஒரு கார் மூலமாக மணமகன் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.