அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசிய கொடி ஏற்றி விழாவை சிறப்பிக்க வேண்டும். மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் வகை தேசிய கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் தேசிய கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த பொடிகளை ஏற்றக்கூடாது. இது சார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுருத்தர்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
