சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.