ஆந்திர மாநிலம் ஓங்கோல் பேருந்து நிலையத்தில் ஒரு அரசு பேருந்து வந்து நின்றது. பின்னர் ஓட்டுனரும், நடத்தினரும் பேருந்தில் இருந்து இறங்கி டீ குடிப்பதற்காக சென்றனர். ஆனால் ஓட்டுனர் பேருந்திலேயே சாவியை விட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது மதுபோதையில் இருந்து முதியவர் ஒருவர் பேருந்தை ஓட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த முதியவர் பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்று பயணிகளை திணற வைத்தார். ஒரு கட்டத்தில் கர்னூல் மேம்பாலம் அருகே ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றனர். அந்த முதியவரை பிடித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படாமல் இருந்ததால் ஓட்டுநர் நடத்துனரும் நிம்மதி அடைந்தனர்.