சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் குளத்தில் மீன் இருப்பதாக நினைத்து ஆர்வமாக கைகளை நீருக்குள் விட, அடுத்த நொடியே 50-க்கும் மேற்பட்ட அட்டைப்பூச்சிகள் அவரது கைகளில் ஒட்டிக்கொண்ட காட்சி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற அந்த இளைஞருக்கு, அட்டைகளின் கடியால் உடலில் காயங்களும், சில இடங்களில் ரத்தக் கசிவும் ஏற்பட்டது. இந்த அறியாமையால் ஏற்பட்ட விபத்து, முன்பின் தெரியாத இடங்களில் ஆர்வக்கோளாறாக செயல்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்துகிறது. இந்த வீடியோ, இயற்கையுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “முன்பின் தெரியாத இடங்களில் கை, கால்களை அடக்கி நடந்துகொள்வது நல்லது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அறியாமையால் இதுபோன்ற சிறிய விபத்துகள் மட்டுமல்ல, சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். இயற்கைச் சூழலில், குறிப்பாக நீர்நிலைகளில், எந்த உயிரினங்கள் உள்ளன என்பதை அறியாமல் ஆர்வத்துடன் செயல்படுவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
View this post on Instagram
“>
இந்த வைரல் வீடியோ, இணையத்தில் பரவி, பொதுமக்களிடையே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியதுடன், இயற்கையுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பரப்பியுள்ளது.
