பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்தியா சிந்து நதி நீர்வழங்கலை நிறுத்தியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது.
இதன் விளைவாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த முடியாமல் போனது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இந்த தடையை அமல்படுத்தியதால், பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை சந்தித்தது என அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இழப்புகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2019-இல் 5,08,000 அமெரிக்க டாலராக இருந்த வருவாய், 2025-இல் 7,60,000 டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவுடன் மோதல் காரணமாக ஏற்பட்ட இழப்பு மற்றும் வருவாய் உயர்வு தொடர்பான இந்த தகவல்கள் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
