ஆந்திரா காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவில் முல்பூர்த்தி மாதுரி (26), தன் பிரசாத் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி அன்று மாதிரி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதிரியின் கணவர் தன் பிரசாத் தனது வேலையில் இருந்து திரும்பி வந்தபோது முன் கதவு உள்ளே போட்டிருந்ததை கண்டு பின் சுவர் ஏறி வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆரம்பத்தில் தன் பிரசாத் மீது அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் காவல்துறையினர் அவரை தொடர்ந்து விசாரித்தனர். அந்த விசாரணையில் 36 வயது சுரேஷை அவர் சுட்டிக் காட்டினார். அவருக்கும் தனது மனைவிக்கும் இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, சுரேஷ் அவர்களின் உறவின்போது மாதிரிக்காக கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். மாதுரி சுரேஷின் மனைவியை விட்டு விட்டு தன்னுடன் வாழுமாறு வற்புறுத்தி உள்ளார். கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி இரவு தனது கணவர் வீட்டில் இல்லை என்று மாதிரி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது வாஷிங் மெஷின் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். உடலுறவு செய்த பிறகு சுரேஷ் அவரை மரக்கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் தன்னை பார்த்திருக்கலாம் என்று நினைத்து அவர்களையும் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை கொள்ளை சம்பவமாக மாற்ற நினைத்து மாதுரியின் தங்க நகைகள் மற்றும் இரண்டு மொபைல் ஃபோன்களை அவர் வீட்டில் இருந்து திருடி சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
