தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தில் ஹிமாயத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் ஜெயின். இவருக்கு பூஜா ஜெயின் (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ நாளன்று அருண்குமார் அலுவலகத்திற்கு சென்ற பின் வீட்டில் அவரது மனைவி பூஜா மற்றும் குழந்தைகள், வேலைக்கார பெண் இருந்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாக தனது அறையில் தனியாக இருந்த பூஜா திடீரென மதியம் 2 மணி அளவில் அறையிலிருந்து வெளியேறி தான் கடவுளிடம் செல்வதாக கூறிவிட்டு ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பூஜா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தான் தொடர்ந்து கடவுளை தியானித்து தம்மை கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டால் கடவுளை நெருங்கி சொர்க்கத்தை அடையலாம் என சமண குருக்களின் பொன்மொழிகளை எழுதி வைத்து
ள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூஜா அதித ஆன்மீக பக்தியால் இந்த முடிவை எடுத்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
