இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Maharashtra #Pune: A tragic incident occurred at Nitro Gym in Chinchwad gaon where a young man, Milind Kulkarni, collapsed during his workout and was later declared dead at Moraya Hospital. Preliminary reports suggest a possible #heartattack. pic.twitter.com/MkJ2Z6ljCk
— Siraj Noorani (@sirajnoorani) August 2, 2025
மகராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டம் சின்ச்வாட் காவுனில் ஒரு ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மிலிந்த் குல்கர்னி என்ற இளைஞர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சரிந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
