மகாராஷ்டிராவின் புனே நகரம், அவுந்த் பகுதியில் உள்ள ராகுல் ஹோட்டல் அருகே நேற்று ஒரு கொடூரமான சாலை விபத்து நடைபெற்றது. 61 வயதான ஜெகன்னாத் காஷிநாத் காலே என்ற முதியவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் அவரது வாகனம் தவறி விழுந்தது. எதிர்பாராத விதமாக அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே வீழ்ந்ததும், பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.

மோதியதுடன் அந்த காரின் சக்கரம் அவரது உடலை மேல் ஏறி  சென்றது. இதன் விளைவாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அந்த காட்சிகளில் விபத்து நொடிகளில் நடந்ததை முழுமையாக காண முடிகிறது. இது அந்த பகுதியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

புனே உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து பல இடங்களில் ஆழமான பள்ளங்கள் உருவாகி இருக்கின்றன. பொதுமக்களின் உயிருக்கு அபாயம் ஏற்படும் அளவுக்கு சாலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துவருகிறது.