இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இது இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில், அமெரிக்க சுங்கத்துறையின் செயல்முறை தேவைகளை கருத்தில் கொண்டு, அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவது காரணமாக, இந்த வரி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், “இந்திய பொருளாதாரம் இறந்து விட்டது. இந்தியா விதிக்கும் வரிகள் உலகிலேயே அதிகம். அவர்களுடன் நாங்கள் பெரிய அளவில் வணிகம் செய்யவில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா இரண்டும், ஏற்கனவே நசிந்த பொருளாதாரங்களை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன,” என்று கடுமையாக விமர்சனம் பதிவு செய்துள்ளார். இந்த பதிவும், வரிவிதிப்பு அறிவிப்பும் தற்போது அதிக அரசியல் பரபரப்பையும், சந்தை பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
