இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்தது. அதில் இறுதி கட்ட போட்டி நேற்று நடைபெற்றது.

அந்தப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

அதில் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து 145 ரன்கள் வெற்றி இலக்காக வைத்து களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டி முடிவடையும் தருவாயில் யூசுப் பதான் சிக்ஸர் அடுத்து போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தார். பின்னர் வெற்றியை கொண்டாடும் விதமாக மைதானத்திற்கு வெளியே நின்ற சிறுவர்களை ஒவ்வொருவராக தூக்கி மைதானத்திற்குள் இறக்கிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து மைதானங்களில் நடந்த நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பலரும் மகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டனர். மேலும் ஓய்வறையில் ஷிகர் தவான் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.