மற்ற நாடுகளை ஒப்பிடுகளில் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைவு. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சீன நாட்டு அரசினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
இருப்பினும் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே குழந்தை பிறப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு ஒரு திட்டம் அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கு ஆண்டுதோறும் 44 ஆயிரம்( 3600 யுவான்) பணம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிதி உதவி குழந்தைக்கு 3 வயது வரை வழங்கப்படும். எனவே ஒரு குழந்தைக்கு 1.30 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தை வளர்ப்பதற்கு சிரமம் இருக்காது என கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2022 மற்றும் 24-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளும் பகுதியளவு நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர். இதனால் வருடத்திற்கு 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும்.
இதனால் குழந்தைகளை வளர்ப்பதற்கு பண பற்றாக்குறை இருக்காது எனவும், இளம் தம்பதிகளின் கருவுறுதல் கவலைகளை குறையும் எனவும் தெரிவிக்கபடுகிறது. இதுகுறித்து சீன நாட்டுஅரசினர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு குழந்தை கொள்கை கைவிடப்பட்டது. இருப்பினும் சில ஆண்டுகளாகவே மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
