வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும். தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகள் வடக்கு அரபிக் கடலின் தெற்கு பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். கேரளா கடலோர பகுதிகள் மற்றும் தேர்வு மாலத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
