கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் மாஸ்கி தாலுகாவில் உள்ள கோனல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நிங்கப்பா என்றவர் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால், பள்ளிக்கு குடிபோதையில் வந்த நிங்கப்பா, நிலை குலைந்த நிலையில் சமையல் அறை அருகே படிக்கட்டில் படுத்து தூங்கினார். இந்த காட்சியை பார்த்த மாணவசிறார்களும், அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பொறுப்பும் ஒழுக்கமும் கொண்டு மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர், குடிபோதையில் பள்ளி வளாகத்திலேயே தூங்கிய சம்பவம் அனைவரையும் வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள், அவர் தூங்கும் புகைப்படங்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறுகிய நேரத்தில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி, விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ರಾಯಚೂರು | ಮದ್ಯಪಾನ ಮಾಡಿ ಶಾಲೆಗೆ ಬಂದ ಮುಖ್ಯಶಿಕ್ಷಕ : ಪೋಷಕರ ಆಕ್ರೋಶ #Raichurhttps://t.co/Aan5B1za9o
— ವಾರ್ತಾ ಭಾರತಿ | Vartha Bharati (@varthabharati) July 24, 2025
“>
சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொதுமக்களும், மாணவர் பெற்றோர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தலைமை ஆசிரியர் நிங்கப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை வட்டார கல்வி அதிகாரி வெளியிட்டு, அதிரடியாக செயல்பட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாதென கல்வித்துறை எடுத்த இந்த நடவடிக்கை பெற்றோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
