ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள அலிபிரி மலை அடிவார சாலையில், இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை சிறுத்தை. ஒன்று தாக்க முயற்சி செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அந்த இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கார் ஒன்றின் டாஷ் கேமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீடியோவில், இரவு சுமார் 3.15 மணியளவில், சாலையோர காட்டிலிருந்து சீறி பாய்ந்த சிறுத்தை ஒன்று வாகனத்தில் இருந்தவர்கள் மீது பாய்ந்த காட்சி பதிவாகியுள்ளது. ஆனால், இருசக்கர வாகனம் வேகமாக சென்றதால், வாகனத்தில் இருந்த இருவரும் அதிலிருந்து தப்பியுள்ளனர். வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்காமல், நிம்மதியாக வாகனத்தை இயக்கி செல்வது காட்சியில் தெரிகிறது. பின்னர் அந்த சிறுத்தை., தாக்குதல் தோல்வியடைந்ததால், காட்டுக்குள் பாய்ந்து விட்டது.
திருப்பதி மலை அடிவாரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்க முயன்ற சிறுத்தைப்புலி …#Tirupati #Cheetah pic.twitter.com/Xa11Bqnl7u
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) July 26, 2025
இதுபோன்றசிறுத்தை. தோன்றும் சம்பவங்கள் அலிபிரி பகுதியில் புதிதல்ல. கடந்த மார்ச் மாதம் கலிகுபுரம் பகுதியில் உள்ள நடைபாதையில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்பும் முக்பு பாவி பகுதியில் சிறுத்தை. தோன்றியதை அடிப்படையாக கொண்டு, இந்த பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நடைபாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
