கேரள முன்னாள் முதல் மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் உட்பட பல தலைவர்கள் மறைந்ததற்கு அவமதிப்பான முறையில் பதிவு வெளியிட்ட நடிகன் மீது டிஜிபி இடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி இறப்புக்கு அவதூறான முறையில் நடிகர் விநாயகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அப்போதே அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி முன்னாள் முதல் மந்திரி வி. எஸ் அச்சுதானந்தனின் மரணத்திற்கு எர்ணாகுளத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நடிகர் நாயகன் பங்கேற்றார். அப்போது “இறக்கவில்லை இறக்கவில்லை எனது தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் இறக்கவில்லை எங்களுடைய வாழ்கிறார்” என கோஷம் எழுப்பினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து உம்மன் சாண்டிக்கு எதிராக கருத்து பதிவிட்டதை பலரும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கண்டனங்களை தெரிவித்தனர்.

அதனிடைய நடிகர் விநாயகன் தனது இணையதள பக்கத்தில்”எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்” என்று மீண்டும் அவதுறை பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

அந்தப் பதிவு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மாநில டிஜிபி இடம் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.