இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் காயத்துடனும் வெளியே  வந்ததன் பின்னணி ரசிகர்களிடையே வருத்தமாக இருந்தாலும்,  பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாளில், கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தை எதிர்கொள்வதற்காக நின்றபோது, ரிஷப் பண்ட்டின் வலது காலில் நேராக பந்து பட்டதால், அவர் கடுமையான வலியால் காயமடைந்து பாதியிலேயே  ஆட்டத்தை விட்டு வெளியேறினார். அவ்வளவுதான் என்று ரசிகர்கள் நினைத்தபோது, அவர் மீண்டும் களத்தில் தோன்றியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய தயாராக உள்ளார்” என்று கூறியதும், விக்கெட் ஒன்றை இழந்த இந்திய அணிக்கு, ரிஷப் பந்த் காயத்துடனும் பேட்டிங்க செய்ய   களமிறங்கினார். வெறும் பேட் செய்ய வந்ததோடு இல்லை, காயம் இருந்தும் அரைசதம் விளாசியதால், ரசிகர்கள் அவரை ‘சூப்பர்ஹீரோ’ என பாராட்டத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் அவருக்கான புகழ்ச்சி வெள்ளம் பெருகியது.

“>

 

இந்த வீரச் செயல், ரசிகர்களுக்கு 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அனில் கும்ப்ளே செய்த வீரதீரத்தை நினைவுபடுத்தியது. அப்போது மெல்வின் டில்லன் வீசிய பந்தால் கும்ப்ளேக்கு தாடையில் அடிபட்டு இரத்தம் சொட்டியது , இருப்பினும் அதைபொருட்படுத்தாமல் .  அவர் தைரியமாக களமிறங்கி பிரையன் லாராவை வேட்டையாடிய சம்பவம் நிகழ்ந்தது. அதேபோலவே, ரிஷப் பந்தின் தைரியம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு புதிய பக்கத்தை எழுதியிருக்கிறது என்றே கூறலாம்.

“>