வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி வைத்ததால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கூத்தாநல்லூரில் பிரச்சாரம் செய்யாமல் இபிஎஸ் புறக்கணிப்பதாக சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் இஸ்லாமியர்களின் அடையாளமான தகியா தொப்பியை அணிந்திருக்கும் புகைப்படத்தை இபிஎஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் திமுக சொல்வதை எல்லாம் தலையாட்டி பொம்மைகளாக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பதாகவும் விமர்சித்துள்ளார்.