2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் (IOB) இருந்து ₹30 கோடி கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக, தமிழக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதை எதிர்த்து, ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதில் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் தக்க ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பதிவான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையின் போது சோதனையில் கைப்பற்றப்பட்டிருந்த சொத்துகள் மற்றும் ஆவணங்களை, ரவிச்சந்திரனுக்கு திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, அரசியல் வட்டாரத்திலும், வங்கிச்சுற்றிய வழக்குகளிலும் கவனம் ஈர்த்துள்ளது.